திருச்சி

த்திய அரசு மக்கள் விரோத சட்ட்ங்களை கை விட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவ்ர் தெரிவித்துள்ளார்.

இன்று தமிழகத்தில் மத்திய அரசைக் கண்டித்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் போராட்டம் நடத்தி வருகிறது.  தற்போது கொரோனா கட்டுப்பாடு விதிகள் அமலில் உள்ளதால் அவரவர் வீடு மற்றும் அலுவலகத்தில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம், வேளாண் சட்டங்கள், பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பொதுத் துறை தனியார் மயம் ஆகியவற்றுக்கு எதிராக நடைபெற்றது.

திருச்சி காஜா நகரில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி சார்பில் அதன் தேசிய தலைவர் காதர் மொகிதீன் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடந்தது.  அப்போது செய்தியாளர்களிடம் காதர் மொகிதீன், ”‘விவசாயிகள்  டில்லியில் நடத்திவரும் போராட்டம் ஓராண்டை நெருங்கிக் கொண்டிருக்கிறது.  அவர்கள் அறவழியில் நடத்தி வரும் போராட்டம் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் விவசாயிகள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் சட்டங்களைக் கைவிட்டு, விவசாயிகளின் பிரச்சினைகளை மத்திய அரசு தீர்த்து வைக்க வேண்டும்.

இது வரை விவசாயிகள் போராட்டம் அமைதியாகவும், சட்டரீதியாகவும் நடைபெற்று வருகிறது. அதை வன்முறை போராட்டமாக மாறிவிடாமல் தடுப்பது மத்திய அரசின் தலையாய கடமையாகும். விவசாயிகள் போராட்டத்தை மத்திய அரசு உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து மக்கள் விரோதச் சட்டங்களைக் கைவிட வேண்டும்” எனக் கூறி உள்ளார்.