சென்னை:
முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் கே. எம். காதர் மொகிதீன்  உடல்நலம் குன்றி திருச்சியில் உள்ள   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவர் உடல்நலம் பெற்று திரும்பி வர பிரார்த்திக்கும்படி நவாஸ்கனி எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சன்  மக்களவை கொறடாவுமான நவாஸ்கனி எம்.பி. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தாய்ச்சபை இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவர், சமுதாய தலைவர் முனிருள் மில்லத் பேராசிரியர் கே. எம். காதர் மொகிதீன் அவர்கள், இந்த பேரிடர் சூழலிலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைமையகமான சென்னை- காயிதே மில்லத் மன்ஸிலில் இருந்து தொடர் களப் பணிகளை கண்காணித்து, மாவட்டந்தோறும் ஆலோசனைகளை வழங்கி வழி நடத்தி வந்த நிலையில்,
சற்று உடல் நலம் குன்றி இருந்ததால் அவர்களின் பிள்ளைகளின் ஆலோசனைகளின் படி மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் சிகிச்சை பெறுவதே சிறந்தது என்ற வகையில் திருச்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறது.
எல்லாம் வல்ல இறைவன் தலைவர் அவர்களுக்கு விரைவில் பூரண உடல் நலத்தை வழங்கிட மனங்கனிந்து பிரார்த்திக்கிறேன்.
தலைவர் அவர்கள் பூரண நலம் பெற்று மீண்டும் புத்துணர்ச்சியோடு சமூக, சமுதாய பணியாற்றிட அனைவரும் பிரார்த்திக்குமாறு வேண்டுகிறோம்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.