10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையிலேயே வெளியாகும்… செங்கோட்டையன்

Must read

சென்னை:

10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மதிப்பெண் அடிப்படையிலே வெளியிடப்படும், கிரேடு முறை கிடையாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தமிழக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்  இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் கிரேட முறையில் வழங்கப்படும் என கூறப்படுவது தவறு. வழக்கம் போல் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் வெளியிடப்படும்.

10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு வேண்டாம் என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு. அதில் மாற்றம் இல்லை, அதுவே தொடரும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கை தொடர்பாக நிபுணர்கள் குழு அளிக்கும் பரிந்துரை அடிப்படையில் முடிவெடுக்கப்படும்.

மும்மொழிக் கொள்கை தொடர்பாக முதலமைச்சர் ஏற்கனவே தெளிவுப்படுத்தி விட்டார்.

இவ்வாறு அவர் கூறினார்.

More articles

Latest article