சென்னை:

நாடு முழுவதும் கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் இறுதித்தேர்வு முடிவுகள்  இன்று வெளியிடப்பட்டது. இதில்,  தமிழக மாணவர் தேசிய அளவில் 7ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட மத்திய அரசுப் பணியிடங்களுக்காக யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காலியாக இருந்த 829 பணியிடங்களுக்கு கடந்த அண்டு தேர்வு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு (2019) செப்டம்பர் மாதம் நடைபெற்ற சிவில் சர்வீஸ்  முதல்நிலைத் தேர்வு  நடை பெற்றது.

பின்னர் 2020ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முதன்மைத் தேர்வு நடைபெற்றது. தொடர்ந்து, 2020 மார்ச் மாதத்தில் நேர்காணலும் நடைபெற்றது. ஆனால், கொரோனா பரவல் தடுப்பு முடக்கம்  காரணமாக நேர்காணல் இடையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், நேர் காணலில் விடுபட்டவர்களுக்கு கடந்த  ஜூலை 20ந்தேதி முதல் மீண்டும் நேர்காணல் நடைபெற்றது. இதையடுத்து, இன்று தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது.

https://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் காணலாம்.

இந்த தேர்வில் தேர்வில் தமிழக மாணவர் தேசிய அளவில் 7ஆவது இடம் பிடித்துள்ளார்.

 நாகர்கோவிலை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்பவர் தமிழகத்தில் முதலிடமும், அகில இந்திய அளவில் 7-வது இடத்தையும் கைப்பற்றி உள்ளார்.