உ.பியில் பதட்டம்: பிஷாராவை விட்டு வெளியேறும் முஸ்லீம்கள்

Must read

தாத்ரியில் மாட்டிறைச்சி உண்டதாக அஃலாக் என்ற இஸ்லாமியரை அடித்து கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக சிறையில் தண்டனை அனுபவித்துவரும் ரவி சிசோடியா என்பவர் சிக்குன்குனியாவால் பாதிக்கப்பட்டு சிறையில் மரணமடைந்ததையடுத்து, அவர் வசித்து வரும் பிஷாராவில் மீண்டும் மதக்கலவரம் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. கலவர பீதி காரணமாக அப்பகுதியில் இருந்து இஸ்லாமியர்கள் வெளியேறி வருகின்றனர்.

dadri

சிசோடியாவின் உடல் பிஷோராவுக்கு வர பதட்டம் இன்னும் அதிகமாகிவிட்டிருக்கிறது. அவரது உடலுக்கு இந்திய தேசிய கொடியை போர்த்தி இந்துதுவ இயக்கத்தை சேர்ந்தவர்களும் அவரது உறவினர்களும் அவரை தியாகி என்று அறிவித்திருக்கின்றனர். அவர் நன்றாகத்தான் இருந்தார் அவரை போலீசார்தான் கொன்றிருக்கிறார்கள் எனவே தங்களுக்கு நீதி கிடைக்கும்வரை சிசோடியாவின் உடலுக்கு இறுதிச்சடங்கு செய்யப்போவதில்லை என்று அவர்கள் உறுதிமொழி எடுத்திருக்கின்றனர்.
முசாபர்நகர் கலவரத்துக்கு காரணமானவர் என்று குற்றம்சாட்டப்பட்டவரான சாத்வி ப்ராச்சி அங்கிருப்பது மேலும் கலவர பீதியை அதிகரித்துள்ளது. அப்பகுதியில் இருந்து முஸ்லீம்கள் கூட்டம்கூட்டமாக வெளியேறிவருகின்றனர்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article