இந்தியாவில் 69% பேருக்கு வேலை பறிபோகும்: உலக வங்கி அதிர்ச்சி ரிப்போர்ட்!

Must read

ளர்ந்து வரும் ஆட்டோமேஷன் துறையால், இந்தியாவில் 69 சதவிகிதம் பேருக்கு வேலை வாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகும் என்று ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
ந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்குத் தொழில்நுட்ப வளர்ச்சியும், உள்கட்டமைப்பு வசதிகளும் மிகவும் அவசியமாக இருக்கிறது.
ஆனால் அதிகத் தொழில்நுட்ப ஈடுபாட்டால் உலக நாடுகளில் மக்களின் இயல்பான வாழ்க்கை முறை எந்த அளவிற்குப் பாதிக்கப்படுகிறது என்பதை உலக வங்கியின் ரிப்போர்ட் காட்டுகிறது.
yongkim-modi
உலக வங்கி செய்த முக்கியமான ஆய்வில் ஆட்டோமேஷன் மூலம் இந்தியாவில் 69 சதவீத வேலை வாய்ப்புகள் பாதிக்கப்பட உள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
ஆட்டோமேஷன் மூலம் இந்தியாவில் 69 சதவீதமும், சீனாவின் 77 சதவீதமும், எத்தியோப்பியாவில் 85 சதவீதம் அளவிற்கு வேலைவாய்ப்புகள் பாதிக்கப்பட உள்ளது என உலக வங்கியின் ஆய்வறிக்கை கூறுகிறது.
ஜிம் கிம் உலக வங்கியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜிம் கிம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், தற்போது உலக நாடுகள் விவசாய உற்பத்தி அதிகரிப்பு என்னும் இயல்பான பொருளாதார வளர்ச்சியை நாம் முழுமையான தொழிற்துறை வளர்ச்சியாக மாற்றி வருகின்றோம்.
இத்தகைய மாற்றம் அனைத்து நாடுகளுக்கும் வெற்றிக்கான பாதையை வகுக்காது என்று ஆணித்தரமாக ஜிம் கிம் கூறினார்.   ஐடி துறை ஆட்டோமோஷன் மூலம் முதலாவதாகவும், அதிகளவில் பாதிக்கப்படப்போவதும் ஐடித்துறை தான்.
தொழில்நுட்ப துறையில் அதன் வளர்ச்சிக்காவும், மேம்படுத்தப்பட்ட சேவை வழங்குவதற்காகவும் அதிகளவி லான முதலீடு செய்யாவார்கள். இந்த முதலீட்டில் பெரிய பங்கு செய்யும் வேலையை எளிமையாக்கும் முறைக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக ஆட்டோமேஷன் மூலம் அதிகளவிலான வேலைவாய்ப்புகளை இந்திய ஐடித்துறை இழக்க நேரிடும்.
உலக வங்கிக்கு முன், சர்வதேச ஐடி சந்தையை ஆய்வு செய்த அமெரிக்காவின்  HFS Research நிறுவனம் 2021ஆம் ஆண்டுக்குள் உலகளவில் சுமார் 69 சதவீத வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் எனக் கூறி உள்ளது.
ஆனால் சந்தையில் அது மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. பிலிப்பைன்ஸ், பிரிட்டன் மற்றும் அமெரிக்கா வில் இதன் பாதிப்பு அதிகமாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
yongkim-modi
HFS Research நிறுவனம் அடுத்த 5 வருடத்தில் ஐடித்துறையில் ஆட்டோமோஷன் ஆதிக்கத்தின் மூலம் “Low Skilled” தர வேலைவாய்ப்புகள் 30 சதவீதம் வரை பாதிக்கப்படும் என HFS Research நிறுவனத்தின் ஆய்வுகள் தெரிவித்துள்ளது.
அதிகம் திறமைகள் தேவைப்படாத, தினந்தோறும் செய்ய வேண்டிய ஒரே வேலைகளையே நாம் Low Skilled வேலைவாய்ப்பாகக் கூறப்படுகிறது.
அதேபோல் மீடியம் ஸ்கில்டு வேலைவாய்ப்புகள் 8 சதவீதம் வரையும், ஹெய்-ஸ்கில்டு வேலைவாய்ப்புகளில் 56 சதவீதம் வரை பாதிக்கப்பட உள்ளதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிபிஓ போன்ற  நிறுவனங்கள் ஆட்டோமேஷன் செய்வதன் மூலம் அதிகளவிலான பிபிஓ வேலைவாய்ப்புகள் காணாமல் போய் விடும் நிலை ஏற்படும்.
இந்நிலையில் HFS Research நிறுவனத்தின் ஆய்வில் அடுத்த 5 வருடத்தில் 3.7 மில்லியன் பிபிஓ வேலை வாய்ப்புகள்  இழப்பு ஏற்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
தற்போது வளர்ந்துவரும் அட்டோமேஷன் துறையால், அனைத்து  வேலைகளும் இயந்திரமயமாக்கப்பட்டு வருகிறது. இதனால் ஊழியர்களின் தேவை அதிகளவில் குறைந்துள்ளது.
இதேபோல் ஒவ்வொரு  ஐடி நிறுவனம்  ஆட்டோமேஷன் செய்யப்பட்டால்,  அந்த இடத்தில் மனிதர்களுக்கு வேலையில்லை.
இதன் காரணமாக  160 பில்லியன் டாலர் துறை பிபிஓ திட்டங்கள் இந்தியாவை விட்டு வெளியேறி பிலிப்பைன்ஸ், வியட்நாம் போன்ற நாடுகளுக்குச் சென்றதிலிருந்து,  ஹெச்1பி விசா பிரச்சனை, தற்போது ஆட்டோமேஷன் வரை கடந்த 5 வருடத்தில் இந்த 160 பில்லியன் டாலர் அளவுக்கு  ஐடித்துறை மிகப்பெரிய சரிவு பாதையை நோக்கிப் பயணிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
ஐடித்துறையில் மட்டும் தானா..? சத்தியமாக இல்லை, உற்பத்தி, தயாரிப்பு, லாஜிஸ்டிக்ஸ், கலை, மருந்துவம், என அனைத்துத் துறைகளிலும் ஆட்டோமேஷன் என்பதை விட இயந்திரங்கள் (Robots) அதிகளவில் பணியாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது.
ஆனால் ஐடித்துறையில் பணியாளர்கள் குறைப்பு குறுகிய காலத்திதல் அதாவது ஆட்டோமேஷன் செய்யப்பட்ட சில வாரங்களில் ஊழியர்கள் வெளியேற்றப்படவோ அல்லது வேறு பிரிவிற்கோ மாற்றப்படுகிறது.
ஆட்டோமேஷன் மூலம் உலக நாடுகளில் இந்த அளவிற்கு வேலைவாய்ப்புகள் மதிப்படைய போவது ஆய்வறிக்கையின் மூலம் நாம் தெரிந்துகொண்ட நிலையில் சரியான வளர்ச்சிப் பாதையை நாம் உருவாக்க வேண்டும் அதுவே உலகப் பொருளாதார வளர்ச்சிக்குச் சிறந்தது என் ஜிம் கிம் கூறினார்.
சுகாதாரம் உலக வங்கியின் ஒறு குழந்தை நலத் திட்டத்தின் மூலம் உலக நாட்களில் குழந்தை வளர்ச்சி குறைவு மற்றும் ஊட்டச்சத்துக் குறைபாடு 10 சதவீதமாகக் குறைந்துள்ளது.
image
கடந்த 10 வருடத்தில் கல்வியறிவு பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை மிகப்பெரிய அளவில் உயர்ந்துள்ளது,
இத்தகைய நாட்டில் குழந்தை வளர்ச்சி குறைபாட்டில் சுமார் 38.7 சதவீத குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும் கல்வியறிவு பெறும் 40 சதவீதம் பேர் சர்வதேச டிஜிட்டல் பொருளாதாரத்திற்குப் போட்டி போட முடியாமல் தவிக்கின்றனர்.
இந்தியாவில் சரியான துப்புரவு வசதிகள் இல்லாத காரணத்தால் அதிகளவிலான குழந்தைகள் பல வியாதிகளுக்குப் பாதிக்கப்படுகின்றனர் எனவும் உலக வங்கியின் ஆய்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக ஜிம் கிம் கூறினார்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி உலக நாடுகளில் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் பொருளாதார நாடுகளில் இந்திய முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் இவ்வேளையில் தொழிற்துறை மற்றும் தொழில்நுட்பத்தில் அதிகளவில் கவனத்தைச் செலுத்துவதை விட அடுத்தத் தலைமுறையை ஆரோக்கியமாக வளர்ச்சிப்பாதைக்குக் கொண்டு செல்ல வழி செய்ய வேண்டும்.
ஏற்கனவே உலக வங்கி ஆட்டோமேஷன் மூலம் 69 சதவீத வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் எனக் கூறியுள்ள நிலையில் அடுத்தத் தலைமுறையினரை சரியான ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்துடன் இல்லை என்றால் ஒட்டுமொத்த இந்தியாவே மருத்துவத் துறையை நோக்கி ஓட வேண்டி நிலை உருவாகும்.
உண்மையிலேயே உலக வங்கியின் அறிக்கை இந்தியாவில் கூடிய விரைவில் மாற்றத்தைக் கொண்டு வரும் என நம்புவோம்.
credit: http://www.goodreturns.in

More articles

Latest article