“உங்களுடன் வாழ்ந்த நான் முட்டாள்” : டி.இமான் முன்னாள் மனைவி மோனிகா!

Must read

இசையமைப்பாளர் டி.இமான் மோனிகாவை திருமணம் செய்து 13 ஆண்டுகள் கழித்து அவரிடமிருந்து சட்டப்படி பிரிந்துவிட்டார். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக மறைந்த கலை இயக்குநர் உபால்டுவின் மகள் எமிலியை மறுமணம் செய்துள்ளார் டி.இமான்.

புது மாப்பிள்ளை இமானுக்கு அவரின் முன்னாள் மனைவியான மோனிகா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியிருப்பது இதுதான் :

“டியர் டி. இமான், இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துக்கள். 12 ஆண்டுகள் உங்களுடன் சேர்ந்து வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மாற்றிவிட முடியும் என்றால், உங்களை போன்ற ஒரு நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள் என நினைக்கிறேன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக உங்களின் சொந்த பிள்ளைகளையே நீங்கள் பார்க்கவும் இல்லை. கவனிக்கவும் இல்லை. ஆனால், அவர்களுக்கு பதிலும் ஒருவரை கண்டுபிடித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. உங்கள் அப்பாவிடம் இருந்து என் பிள்ளைகளை நான் பாதுகாப்பேன். தேவைப்பட்டால் அந்த புது குழந்தையையும் நான் பாதுகாப்பேன். திருமண வாழ்த்துக்கள்…” என்று தெரிவித்துள்ளார்.

இமானுக்கும், மோனிகாவுக்கும் கடந்த 2021-ம் ஆண்டு நவம்பர் மாதம்தான் விவாகரத்து கிடைத்தது. இதையடுத்து ஒரு வருடத்திற்குள்ளாகவே இந்த மே மாதம் 15-ம் தேதி இமான் மறுமணம் செய்து கொண்டதைத்தான் மோனிகா இப்படி கூறியிருக்கிறார்.

More articles

Latest article