சென்னை: பாடல்கள் உரிமம் தொடர்பான வழக்கில் சென்னை நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா இன்று தனது வழக்கறிஞர்களுன் நேரில் ஆஜரானார்.
109 பட பாடல்களை யூடியூப், சமூக ஊடகங்களில் வெளியிட தடை கோரி மியூசிக் மாஸ்டர் நிறுவனம் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு இசைஞானி இளையராஜா இன்று நேரில் ஆஜரானார்.
கடந்த 2010ஆம் ஆண்டு தாங்கள் உரிமம் பெற்றுள்ள பாடல்களை யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதை தடுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மியூசிக் மாஸ்டர் என்ற இசை நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கில், தேவர் மகன், குணா உள்ளிட்ட 109 படங்களில் பாடல்களின் உரிமத்தை பெற்றதற்கான ஒப்பந்தம் இசையமைப்பாளர் இளையராஜா மனைவி பெயரிலுள்ள நிறுவனத்துடன் போடப்பட்டதாகவும், அந்த பாடல்களை தற்போது யூடியூப் மற்றும் சமூக ஊடகங்களில் வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் எதிர்மனுதாரராக இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் அவரது மனைவி பெயரிலுள்ள நிறுவனம் சேர்க்கப்பட்டது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இன்று காலை விசாரணைக்கு இளையராஜா நேரில் ஆஜரானார். வழக்கின் விசாரணையின்போது, தனது சாட்சியத்தை வழங்கினார்.
தேவர்மகன், குணா உள்ளிட்ட 109 படங்களின் பாடல் உரிமை தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் இசையமைப்பாளர் இளையராஜா ஆஜர்.