
கொரோனா தொற்றால் தற்போது நிலவிவரும் பதட்டமான சூழலில் இசையால் ஒரு நேர்மறை எண்ணத்தையும், ஆறுதலையும் தர முடியும் என்று பாடகர் சங்கர்மகாதேவன் கூறியுள்ளார்.
ஏஷியன் பெயிண்ட்ஸ் நிறுவனம் #LiveFromHome என்ற முன்னெடுப்பின் ஒரு அங்கமாக, ஷங்கர் மகாதேவன் இசை நிகழ்ச்சி ஒன்று நடக்கிறது.
நமது தேசத்தை சூழ்ந்திருக்கும் கரு மேகங்களுக்கு நடுவில் ஒரு வெளிச்சக் கீற்றைப் பார்க்க வைக்கும் சக்தி இசைக்கு இருக்கிறது. அது ஒரு நேர்மறை எண்ணத்தை, ஆறுதல் உணர்வைக் கொண்டு வரும். ஒருவருக்காக நாம் பாடும் பாடல் அவரது மோசமான நாளை மாற்றலாம், இதிலிருந்து நம் அனைவருக்கும் ஒரு வகையான நம்பிக்கை கிடைக்கும் என கூறியுள்ளார் .
Patrikai.com official YouTube Channel