Tennis Britain - Barclays ATP World Tour Finals - O2 Arena, London - 20/11/16 Great Britain's Andy Murray celebrates with the Year-End No. 1 Trophy Reuters / Toby Melville Livepic EDITORIAL USE ONLY.

லண்டனில் ஏடிபி வேர்ல்டு டூர் பைனல்ஸ் நேற்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியனான செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சை, ஆன்டி முர்ரே 6-3, 6-4 என்ற நேர் செட்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். ஏடிபி பைனல்ஸில் இதுவரை தொடர்ச்சியாக 5 முறை வெற்றி பெற்ற நோவக் ஜோகோவிச், இம்முறை தோல்வியை தழுவி உள்ளார்.

தொடர்ந்து 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள முர்ரே, தரவரிசை பட்டியலில் முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். வெற்றி குறித்துப் பேசிய முர்ரே, “இன்றைய நாள் மிகச்சிறப்பானது. சாம்பியன் பட்டம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. முதல் நிலை வீரர் என்ற பெருமையோடு இந்த சீசனை முடித்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. இப்படி நடக்கும் என நான் நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை எனக் கூறினார்.