மும்பை தீ விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிப்பு

Must read

மும்பை:
மும்பை தீ விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் அறிவிக்கப் பட்டுள்ளது.

மும்பை டார்டியோ பகுதியில் 20 மாடிகள் கொண்டு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த கட்டிடத்தில் இன்று காலை 7.28 மணியளவில் 18வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இந்நிலையில், இந்த தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு நிவராணம் வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை டார்டியோ பகுதியில் ஏற்பட்ட கட்டடத் தீவிபத்தில் சிக்கி உயரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு PMNRF நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

காயமடைந்தவர்குக்கு தலா ரூ. 50 ஆயிரம் வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மகாராஷ்ரா அரசு உயிரிந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவராணமாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article