கொரோனா நோயாளியை ஐசியுவில் சேர்க்க ஒன்றரை லட்ச ரூபாய் லஞ்சம் வாங்கிய மருத்துவர் கைது! மகாராஷ்டிராவின் அவலம்…

Must read

மும்பை: நாட்டிலேயே தொற்று பாதிப்பில் முதலிடத்தை பிடித்துள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில், கொரோனா நோயாளியை மருத்துவமனையின்  ஐசியுவில் சேர்க்க ஒன்றரை லட்ச ரூபாய் லஞ்சம்  வாங்கியது  தொடர்பாக அந்த மருத்துவமனையின்  மருத்துவர் உள்பட 5 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்  கைது செய்யப்பட்டார்.  இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

‘நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. உலகிலேயே மிக அதிக அளவிலான தினசரி பாதிப்புகளை இந்தியா பதிவு செய்துள்ளது. இந்தியாவிலேயே அதிக பாதிப்பு மகாராஷ்டிராவில் நிகழ்ந்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்று  தொடங்கியது முதல் தற்போதுவரை மகாராஷ்டிரா மாநிலமே முதலிடத்தை பிடித்துள்ளது.

தொற்று பாதிப்பு காரணமாக, பல மாநிலங்களில் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் இடம்கிடைக்காத  நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும், மருந்துகள், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக, கள்ளமார்க்கெட்டிலும் விற்பனை  செய்து வரும்  அவலம் ஏற்பட்டு வருகிறது. பல அரசு மருத்துவமனைகளில் ஊழியர்கள், நோயாளிகளின் உறவினர்களிடம் பணம் பிடுங்குவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தானெ பகுதியில் உள்ள நாலசோபரா மையத்தில் கொரோனா  நோயாளியை  ஐசியுவில் சேர்த்து சிகிச்சை அளிக்க லஞ்சம் கேட்ட கொடுமை நிகழ்ந்துள்ளது. இந்த மருத்துவமனையில்  கொரோனா நோயாளிகளுக்கு  இலவசமாக சிகிசை வழங்கப்பட்டு வந்த நிலையில், உயிருக்கு ஆபத்தான நோயாளிகளை சேர்க்க ரூ.1.50 லட்சம் லஞ்சம் கேட்டுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட நபரின் மகன் சச்சின் பாபர் (வயது 34), நவநிர்மான் கட்சி தலைவர் அவினாஷ் ஜாதவை அணுகி புகார் கூறினார். இதையடுத்து, அவர்  தானே மேயர் நரேஷ் மஸ்கேவிடம் கூறியதாகவும், அதைத்தொடர்ந்து புகாரின் பேரில், லஞ்சம் வாங்கிய மருத்துவர் மற்றும் அவருக்கு உதவிவர்கள்மீது  தானே நகராட்சி  வழக்கு பதிவு செய்தது.

இதுதொடர்பாக காவல்துறை 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது. அதைத்,  பர்வேஸ் ஷேக் என்ற  எம்பிபிஎஸ் மருத்துவர் கைது செய்யப்பட்டார்.‘ து மேலும் விசாரணை நடந்து வருகிறது” என்று கபுர்பாவடி காவல் நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

More articles

Latest article