ஐதராபாத்
தமிழைப்போலவே தெலுங்கிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியிருக்கிறது. மிகச் சமீபத்தில் துவங்கப்பட்டுள்ள அந்த நிகழ்ச்சியில் இருந்து நடிகை முகமைத்தான் வெளியேற்றப்பட இருக்கிறார். நிகழ்ச்சி குறித்த காரணம் அல்ல… போதைப்பொருள் கடத்தல் வழக்கில் இவரை விசாரிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளதால்!
ஆம்… போதை பொருள் விவகாரத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக, தெலுங்கு நடிகர், நடிகைகளுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.
மற்ற நடிகர், நடிகைகளுக்கு சம்மன் அனுப்பிய போலீசார், முமைத்கானுக்கு எங்கு சம்மன் அனுப்புவது எப்படி என்று குழப்பம் ஏற்பட்டது. காரணம் அவர் தற்போது தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்தகொண்டிருக்கிறார். மற்ற நிகழ்ச்சி போல இது இல்லை. நூறு நாட்கள் அந்த பிக்பாஸ் வீட்டிலேயே தங்க வேண்டும்.
ஆகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்துபவர்களுக்கு அந்த சம்மனை காவல்துறையினர் அனுப்பினர். வரும் 27-ம் தேதி அவரை ஆஜராக சொல்லும்படி உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால் நிகழ்ச்சியை நடத்துபவர்கள் முமைத்கான் ஆஜராக கால அவகாசம் கேட்டனர். இதனை ஏற்க மறுத்த காவல்துறையினர், 27ம் தேதி அவசியம் விசாரணைக்கு வரவேண்டும் உறுதியாக கூறி விட்டனர்.
ஆகவே போட்டியில் இருந்து முதல் ஆளாக முமைத்கான் வெளியேற்றப்பட இருக்கிறார்.