சென்னை:
கேரள அரசு மற்றும் அம்மாநில அரசியல் கட்சிகளால், முல்லை பெரியாறு அணை விவாகாரம், மீண்டும் எழுந்துள்ள  நிலையில், மத்திய அரசிடம் முறையிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை, தமிழக பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில்  இருக்கிறது.  இந்த அணை  தமிழகத்தின், தேனி, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை நிறைவு செய்கிறது.  இந்த அணை நீரை பயன்படுத்தி, மின் உற்பத்தியும் செய்யப்படுகிறது.
உச்சநீதிமன்ற  உத்தரவுப்படி, அணையின் நீர்மட்டம், 142 அடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், அணையின் நீர்மட்டத்தை, 152 அடியாக உயர்த்த தீர்ப்பில் வழிவகைசெய்யப்பட்டுள்ளதால், இதற்கான அனுமதியை பெற தமிழக அரசு முனைப்பு காட்டி வருகிறது.
சமீபத்தில், கேரளாவின் புதிய முதல்வராக பொறுப்பேற்ற  பினராயி விஜயன், அணை பலம் குறித்து, தமிழகத் திற்கு சாதகமான  கருத்தை டில்லியில் தெரிவித்தார். இதையடுத்து  அணையின் நீர் மட்டம், 152 அடியாகஉயர்த்தப்படும் என்ற நம்பிக்கை எழுந்தது.
download (2)
ஆனால் அவரது கருத்துக்கு கேரளாவில் எதிர்ப்பு எழுந்ததால், டில்லியிலிருந்து திருவணந்தபுரம் வந்தவுடன், மாற்றிப் பேசினார். , ‘அணையை சர்வதேச நிபுணர்கள் ஆய்வு செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தார்.  மேலும்,  கேரள மாநில அமைச்சர்கள் மற்றும் காங்., உள்ளிட்ட கட்சிகள், புதிய அணையை கட்ட வேண்டும் எனக் கூறி, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து தமிழக பொதுப்பணித் துறை அதிகாரி வட்டாரத்தில் விசாரித்தபோது, “தென் மேற்கு பருவமழையால், அணையின் நீர்மட்டம் உயரத் துவங்கி உள்ளது. கேரளாவில் பருவமழை தீவிரம் அடைந் துள்ளதால், அணைக்கு நீர் வரத்து, எதிர்வரும் நாட்களில் கணிசமாக அதிகரிக்கும்.
இப்படி, அணை நீர்மட்டம் அதிகரிக்கும் நேரத்தில், விவகாரத்தை கிளப்பவதை கேரள அரசியல் கட்சிகள்  தொடர்ந்து செய்து வருகின்றன.   கேரள காவல்துறையினரும்  வனத்துறையினரும் கெடுபிடி செய்ய ஆரம்பித்துவிட்டனர். இதையெல்லாம்  தாண்டியே, தமிழக பொதுப்பணித் துறையினர், அணைக்கு சென்று பராமரிப்பு மற்றும் நீர் அளவை பணிகளை கவனித்து வருகின்றனர்.
எனவே, அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையின் அவசியம் குறித்து, அரசுக்கு தெரிவிக் கப்பட்டுள்ளது. கேரள அரசின் கெடுபிடிகள் குறித்து  மத்திய அரசிடம், தமிழக அரசு முறையிட இருக்கிறது” என்று தமிழக அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கின்றன.