உபியின் முன்னாள் முதல்வர் உடல் நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

Must read

லக்னோ: சமாஜ்வாதி கட்சி நிறுவனரும், உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் உடன் நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக, மருத்துவமனை தெரிவித்துள்ளது.

நாட்டின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான,  உ.பி. மாநில முதல்வருமான 82வயது முலாயம்சிங் யாதவுக்கு சமீபத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக அரியானாவின் குருகிராம் நகரில் உள்ள மேதந்தா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிறப்பு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அவரது உடல் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், சிறப்பு மருத்துவக்குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும்  மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

முலாயம்சிங் யாதவ், 1992-ம் ஆண்டு  சமாஜ்வாதி கட்சியை தொடங்கினார். 1993-ல் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கை கோர்த்தார். இருவரும் சேர்ந்து உ.பி.யில் பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டினர். ஆனால் இரு கட்சிகளில் இடையே அதிகாரப்போர் ஏற்பட்டதால், கூட்டணி உடைந்தது. பின்னாளில் பகுஜன் சமாஜ் கட்சி, பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டது. அதைத்தொடர்ந்து அங்கு கடந்த இரு முறையாக பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முலாயம் சிங், உ.பி. மாநிலத்தின் முதல்வராக 3 முறையும், நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Support patrikai.com

பத்திரிக்கை டாட் காம் இணையதள செய்திகளை அதிகளவு விரும்பி படிப்பதற்கு நன்றி. சிறந்த முறையில் செய்திகளை தொடர்ந்து வழங்க பத்திரிக்கை டாட் காம் குழுவிற்கு உங்கள் நிதிப் பங்களிப்பை வழங்கி ஆதரவளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். தொடர்ந்து பல்வேறு கோணங்களில் செய்திகளை வழங்கவும், பதிவு செய்யப்படாத அரிய செய்திகளை ஆவணப்படுத்தவும் உங்கள் நன்கொடை உதவிகரமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

More articles

Latest article