க்னோ

மூத்த அரசியல் வாதியும் சமாஜ்வாதி கட்சி நிறுவனருமான முலாய்ம் சிங் மருமகள் இன்று பாஜகவில் இணைய உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகையைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள 403 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது.   இந்த தேர்தல் வரும் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை நடைபெற உள்ளது.  மார்ச் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இம்முறை ஆளும் பாஜக, காங்கிரஸ், பாஜக, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், எஐஎம்ஐஎம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் களமிறங்க உள்ளன .இன்னும் சில நாட்களில்  தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது.  பாஜகவைச் சேர்ந்த சிலர் சமாஜ்வாதி கட்சிக்கு மாறியதால் கடும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதே வேளையில் உத்தரப்பிரதேச அரசியலில் திடீர் திருப்பமாக சமாஜ்வாதி கட்சி நிறுவனரான முலாயம் சிங்கின் மருமகள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  இவர் முலாயம் சிங்கின் இளைய மகன் பர்திக் யாதவ் மனைவி ஆவார்.  கடந்த 2017 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு இவர் தோல்வி அடைந்துள்ளார்.

ஏற்க்னவே பாஜக தலைவர்களுடன் அபர்னா பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாகவும், இன்று கட்சியில் இணைவதற்காக அவர் தற்போது டெல்லியில் உள்ளதாகவும் பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  தற்போது உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தலில் பாஜக-சமாஜ்வாதி இடையே கடும் போட்டி நிலவி வரும் சூழ்நிலையில் இந்த தகவல் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.