டில்லி

ன்று டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது.

வரும் 31 ஆம் தேதி இந்திய நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூடத் தொடர் தொடங்க உள்ளது.  இந்த தொடர் வரும் ஏப்ரல் 8 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  வரும் பிப்ரவரி மாடம் 1 ஆம் தேதி வரும் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.   

இந்த தொடர் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது.  ஜனவரி 31 முதல் பிப்ரவரி 21 வரை முதல் கட்ட தொடர் நடைபெற உள்ளது.  இரண்டாம் கட்ட தொடர் மார்ச் 11 முதல் ஏப்ரல் 8 வரை நடைபெறுகிறது.  நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணியில் மத்திய நிதி அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

நிதிநிலைக் கூட்டத் தொடர் நெருங்கி வரும் நிலையில் இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.   நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து இந்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.