காங்கிரஸ் கட்சி தலைவர் போட்டியில் 59வயது முகுல் வாஸ்னிக் தேர்வாக வாய்ப்பு?

Must read

டில்லி:

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராகுல்காந்தி ராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த தலைவராக தலித் சமூகத்தை சேர்ந்த முகுல் வாஸ்னிக் தேர்வாகும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக நடைபெற்று வரும் நிகழ்வுகள் தெளிவுபடுத்துகின்றன.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, தமிழக ஒருங்கிணைப்பு குழு காங்கிரஸ் மூத்த தலைவர் முகுல்வாஸ்னிக் தலைமையில் அமைக்கப்பட்டு தேர்தலை சந்தித்து. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் இளந்தலைவர் ராகுல்காந்தி, ராஜினாமா செய்ததை அடுத்து, புதிய தலைவர் யார் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு ராகுலை போல இளந்தலைவர்கள் தேவை என ஒருதரப்பினர் கோரிக்கை வைக்கும் நிலையில், மூத்த உறுப்பினர்களே தலைவராக வேண்டும் என்றும் மற்றொரு புறம் குரல் எழுப்பப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ராகுலின் தீவிர ஆதரவாளரான முகுல் வாஸ்னிக், காங்கிரஸ் தலைவருக்கான போட்டியில் முன்னிலை வகிப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  காங்கிரஸ் மூத்த தலைவர்க ளான கரண்சிங், அமரீந்தர் சிங் மற்றும் ஜனார்தன் திவேதி, கார்கே, ஷிண்டே போன்றவர்களுடன் ஒப்பிடும்போது, முகுல்வாஸ்னிக்குக்கு ஆதரவு அதிகரித்தே காணப்படுகிறது.

அதே வேளையில், பல மூத்த தலைவர்களுக்கு போட்டியாக ஜோதிராதித்யா சிந்தியா, சச்சின் பைலட் போன்ற  ஆற்றல்மிக்க இளம் தலைவர்களும் தலைமை பதவிக்கான போட்டியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் அடுத்த வாரம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், அப்போது, காந்தி அல்லாத ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க நிர்வாகிகள் முடிவு செய்து உள்ளதாக கூறப்படுகிறது.

தலைவர் பதவிக்கு 4 பேர் பெயர்கள் பரிசீலனை செய்யப்பட உள்ளதாகவும், இதில் தலித் சமூகத்தை சேர்ந்த முகுல்வாஸ்னிக் தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக வும் காங்கிரஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

காங்கிரஸ் கட்சியை மீண்டும் உற்சாகப்படுத்தக்கூடிய ஒரு தலைவரை தேர்வு செய்ய வேண்டும் என்று  போபாலில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோந்திராதித்யா சிந்தியா  தெரிவித்தார். நான் அதிகாரத்திற்காக உழைக்கவில்லை என்று ராகுல் காந்திஜிக்கு நான் மீண்டும் மீண்டும் சொன் னேன், ஆனால் எனது நோக்கம் வளர்ச்சிக்காக உழைப்பதே ஆகும்.” கட்சி ஒரு “சிக்கலான சூழ்நிலையை” கடந்து வருவதாகவும், தான் எந்த பதவிக்கும் போட்டியிடவில்லை என்று கூறியவர்,  என்றவர், தன்னை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புவதாகவும்  தெரிவித்துள்ளார்.

More articles

Latest article