சேலம்: மறைந்த திருச்செங்கோடு டி.எம்.காளியண்ண கவுண்டர் மனைவி திருமதி பார்வதியம்மாள் இன்று காலமானார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Patrikai.com official YouTube Channel
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
சேலம்: மறைந்த திருச்செங்கோடு டி.எம்.காளியண்ண கவுண்டர் மனைவி திருமதி பார்வதியம்மாள் இன்று காலமானார். அவரது மறைவுக்கு காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

1947ம் ஆண்டு ஆகஸ்டு 15ந்தேதி இந்தியா சுதந்திரம் பெற்ற பின், 1948ஆம் ஆண்டு மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படாத சூழலில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க இந்திய அரசியல் நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்டது. இந்த சபைக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில், சென்னை மாகாணத்தில் இருந்து அப்போதைய மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டிருந்த டி.எம்.காளியண்ணன் சேர்க்கப்பட்டார். இவர் தனது 101 வயதில் காலமான நிலையில், அவரது மனைவி பார்வதியம்மாள் இன்று இன்று மதியம் சுமார் 12.10 மணிக்கு திருச்செங்கோட்டில் காலமானார்.
பார்வதியம்மாள் மறைவுக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள், மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அஞ்சலி மற்றும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.