சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் வாழப்பாடியார் 82-வது பிறந்தநாள் விழா நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழ்நாங்கிரஸ் காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ்.அழகிரி முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மத்திய அமைச்சருமான திரு. வாழப்பாடி கூ. ராமமூர்த்தி அவர்களின் 82-வது பிறந்தநாள் விழா, நாளை (18.1.2022) செவ்வாய்கிழமை காலை 9.30 மணியளவில் சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், எண். 11, 2வது பிரதான சாலையில் அமைந்துள்ள ராஜிவ் பவனில் நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து காலை 11 மணியளவில் சென்னை, சத்தியமூர்த்தி பவனில் திரு. வாழப்பாடி கூ. ராமமூர்த்தி அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்படும்.

இந்நிகழ்வுகளில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னணி தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், மற்றும் காங்கிரஸ் செயல் வீரர்கள் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.