விரைவில் அதிமுக பொதுச்செயலாளராவார் ஓ.பிஎஸ்- மா.பா. பாண்டியராஜன் பேச்சு

Must read

சென்னை

திமுகவின் பொதுச்செயலாளராக ஓ.பன்னீர்செல்வம் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார். திருவள்ளூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

அதில் பேசிய முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன், அதிமுக பொதுச் செயலாளராக விரைவில் ஓ.பன்னீர்செல்வம் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவித்தார்.

மேலும், மக்கள் விருப்பத்துக்கு மாறாக டி.டி.வி தினகரனை அ.தி.மு.கவின் துணை பொதுச்செயலாளராக சசிகலா அறிவித்தார் என  பாண்டியராஜன் குற்றஞ்சாட்டினார்.

மேலும் அவர், “ டி.டி.வி தினகரன் யார் என்று தேர்தல் கமிஷன் கேட்கிறது. அ.தி.மு.கவில் அவரது பெயர் இல்லையே என்று வினா எழுப்பியுள்ளது. கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட தினகரன் இன்று அதே கட்சியை நடத்துகிறார் என்றால் தொண்டர்கள் எப்படி ஏற்பார்கள்?. அடுத்த கட்டமாக சசிகலா நியமனமும் செல்லாது என்ற அறிவிப்பு விரைவில் வரும். ஓ. பன்னீர்செல்வம் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்”  என்றார்.

ஓ. பன்னீர்செல்வத்தின் தலைமையின் கீழ், விரைவில் அ.தி.மு.க வீறு நடைபோடும். அ.தி.மு.க வும் இரட்டை இலையும், தலைமைக்கழகமும் நம்மிடம் வந்துசேரும். இவ்வாறு அவர் பேசினார்

 

More articles

Latest article