இன்று இரவு 7 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார் எம்.பி. மைத்ரேயன்

Must read

சென்னை:

பன்னீர் ஆதரவு எம்.பி மைத்ரேயன் இன்று இரவு 7 மணிக்கு ஆளுநரை சந்திக்கிறார்.

சட்டமன்றத்தில் தனது பலத்தை நிரூபிப்பேன் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநரிடம் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் சசிகலாவுக்கு பதிலாக எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆதரவு எம்எல்ஏ.க்கள் பட்டியலை கவர்னரிடம் கொடுத்து ஆட்சி அமைக்க எடப்பாடி பழனிச்சாமி உரிமை கோரினார்.

இந்நிலையில் பன்னீர்செல்வம் ஆதரவு எம்.பி.யான மைத்ரேயன் இன்று இரவு 7 மணிக்கு ஆளுநரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவருடன் மனோஜ் பாண்டியனும் செல்வதாக தெரிகிறது. எடப்பாடி சந்திப்பை தொடர்ந்து பன்னீர் தரப்பும் ஆளுநரை சந்திப்பதால் அரசியல் களம் நொடிக்கு நொடி சூடுபிடித்துக் கொண்டே இருக்கிறது.

More articles

Latest article