ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டி : மத்தியப் பிரதேச அணி தோல்வி

Must read

ந்தூர்

ஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் மத்தியப்பிரதேச அணி ஆந்திர அணியிடம் தோல்வி அடைந்தது.

ரஞ்சி டிராபி கிரிக்கெட் போட்டியில் எலைட் பி பிரிவு போட்டி இந்தூரில் நடைபெற்றது.    இந்த போட்டியில் ஆந்திர அணியும் மத்தியப் பிரதேச அணியும் மோதின   ஆந்திர அணி முதல் இன்னிங்சில் 132 ரன்கள் எடுத்திருந்தது.   மத்திய பிரதேச அணி முதல் இன்னிங்சில் 91 ரன்கள் எடுத்திருந்தது.

ஆந்திர அணி இரண்டாம் இன்னிங்சில் அபாரமாக ஆடி 301 ரன்கள் குவித்தது.   அதனால் மத்திய பிரதேச அணிக்கு வெற்றி இலக்காக 343 ரன்கள் நிர்ணயம் செய்யப்பட்டது.   நேற்று இரண்டாம் இன்னிங்சில் மத்தியப் பிரதேச அணி 3 விக்கட்டுகளை இழந்து 35 ரன்கள் எடுத்திருந்தது.

இன்று தொடங்கிய ஆட்டத்தில் மத்தியப் பிரதேச அணி ஒரு ரன் கூட எடுக்காமல் அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.   நேற்றைய ஸ்கோரான 35 ரன்களுடன் ஆட்டம் இழந்த மத்திய பிரதேச அணி தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லீக் ஆட்டத்தில் 3 வெற்றிகளைப் பெற்ற மத்தியப் பிரதேச அணி இந்த தோல்வியால் கால் இறுதிப் போட்டிக்கான தகுதியை இழந்துள்ளது.

More articles

Latest article