போபால்:

பாஜகவைச் சேர்ந்த பிரக்யா தாக்கூர் மீதான 12 ஆண்டுகளுக்கு முந்தைய கொலை வழக்கை மீண்டும் விசாரிக்க மத்திய பிரதேச அரசு முடிவு செய்துள்ளது.


போபால் மக்களவை தொகுதியில் காங்கிரஸ் தலைவர் திக் விஜய் சிங்கை எதிர்த்து பாஜக வேட்பாளராக பிரக்யா சிங் தாக்கூர் போட்டியிட்டார்.

நாதுரான் கோட்ஸே தேச பக்தர் என்று கூறி சர்ச்சையில் சிக்கிய அவர், பின்னர் மன்னிப்பு கேட்டார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் பிரக்யா சிங் தாக்கூர் வெற்றி பெறுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் முன்னாள் பிரச்சாரகர் சுனில் ஜோஷி கொலை வழக்கை மீண்டும் தூசி தட்டி எழுப்பியுள்ளது மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு.

கடந்த 2007-ம் ஆண்டு ஜோஷி சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் சாட்சியம் இல்லை என்று கூறி பிரக்யா தாக்கூர் உள்ளிட்ட 7 பேரை நீதிமன்றம் விடுதலை செய்தது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய சட்ட ஆலோசனையை பெற்று வருவதாக சட்ட அமைச்சர் பிசி.சர்மா தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கையை அரசியல் பழிவாங்கும் செயல் என பாஜக செய்தி தொடர்பாளர் ரஜ்னீஸ் அகர்வால் விமர்சித்துள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டு மாலேகாவ் குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட பிரக்யா தாக்கூர், தற்போது ஜாமீனில் விடுதலையாகியுள்ளார்.