ராவன்பிபல்கான், மத்திய பிரதேசம்.

ரெயிலில் இருந்து விழுந்து அடிபட்ட இளைஞரை தனது தோளில் சுமந்து 1.5 கிமீ தூரம் ஓடி மருத்துவமனையில் ஒரு காவலர் சேர்த்துள்ளார்.

மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து சற்று தொலையில் உள்ள ஓரு சிற்றூர் ராவன்பிபல்கான் ஆகும். நேற்று இந்த ஊரில் ரெயிலில் சென்றுக் கொண்டிருந்த அஜித் என்னும் 20 வயது இளைஞர் திடீரென ரெயிலில் இருந்து தவறி விழுந்து விட்டார். படுகாயம் அடைந்த அவர் அந்த ரெயில்வே லைனின் ஓரத்தில் கிடந்துள்ளார். இது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு தகவலளிக்கபட்டுள்ளது.

அதை ஒட்டி காவலர் பூனம் பில்லோர் மற்றும் ஓட்டுனர் ராகுல் சகேல் ஆகிய இருவரும் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அஜித் அடிபட்டு விழுந்துள்ள இடம் வாகனம் செல்ல வசதி இல்லாத இடமாகும். எனவே இருவரும் 1.5 கிமீ தூரமுள்ள சாலையில் வாகனத்தை நிறுத்தி விட்டு சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். அங்கு அஜித் உயிருக்கு போராடிக் கொண்டு இருந்துள்ளார்.

அவர் உயிரைக் காக்க பூனம் பில்லோர் அவரை தனது தோளில் சுமந்த படி வேகமாக ஓடி உள்ளார். சுமார் 1.5 கிமீ ஓடி அவரை காவல்துறை வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். இந்த நிகழ்வு காவல்துறைக்கு தெரிவித்த நபர் வீடியோ பதிவாக்கி உள்ளார். அந்த வீடியோ சமூக தளங்களில் பரவி வைரலாகிஉள்ள்து.

அடிபட்ட இளைஞர் அஜித் போபால் மருத்துவ மனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

 

https://www.youtube.com/watch?v=CypLSU4Haq0