சென்னை:

ரடங்கை மீறி வாகனங்களை ஓட்டிச்செல்லும் நபர்களை மடக்கும் காவல்துறையினர், அவர்களை குட்டிக்கரணம், தோப்புக்கரணம் போடச்சொல்லி வந்த நிலையில், தற்போது கொரோனா மூகமூடிகளை அணியச் சொல்லி காமெடி செய்து வருகின்றனர்.

இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க 21 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, அனைத்து வகையான நடவடிக்கைகளும் முடக்கப்பட்டு உள்ளது. மக்கள் வீட்டைவிட்டு வெளியேற வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுஉள்ளது.

ஆனால், தமிழக்ததில், மக்கள் எப்போதும்போல வாகனங்களை ஊர் சுற்றி வருகின்றனர். அவர்களை தடுக்க வேண்டிய காவல்துறையோ செயலற்று உள்ளது.

இதன் காரணமாக, வாகனங்களில் ஊர் சுற்றுவோர் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதுபோன்ற நபர்களை மடக்கும் காவல்துறையினர், கொரோனா போன்ற வடிவமைக்கப்பட்ட முகமூடி அணிந்து, அவர்களுக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.

சென்னை பாடி மேம்பாலத்தில் வாகனங்களில் வந்தவர்களை மடக்கி யாகவ்லதுறையினர் அவர்களின் முகத்தில் கொரோனா முகமூடி அணிவித்து, “நான் வெளியே வரமாட்டேன்” என்று சத்தமாக அவர்களை கூறச்சொல்லியது.

ஏற்கனவே ஊரடங்கை மீறுவோர் மீது காவல்துறையினர் எடுத்து வரும் நடவடிக்கைகளை  பொதுமக்கள் காமெடியாக நினைத்து வரும் நிலையில், தற்போது கொரோனா முகமூடி மேலும் ஒரு காமெடி சீனை  உருவாக்கி உள்ளது.