பெண்குழந்தை பிறக்கும் என ஜோதிடர் கணித்ததால் மருமகள் மீது ஆசிட் வீசிய மாமியார்

Must read

நெல்லூர்: 
ருமகள் கருவிலிருப்பது பெண் குழந்தை என்று  ஜோதிடர் கணித்துக் கூறியதால், அவர் மீது மாமியார் ஆசிட் வீசிய சம்பவம் ஆந்திராவை அதிர வைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் கிரிஜா (27) இவருக்கு திருமணமாகி பெண் குழந்தை ஒன்று உள்ளது. சமீபத்தில் இவர் மீண்டும் கருவுற்றார். அதுவும் பெண்குழந்தைதான் என்று குடும்ப ஜோதிடர் கணித்துச் சொன்னார்.
a
“மீண்டும் பெண் குழந்தையா” என ஆத்திரம் அடைந்த கிரிஜாவின் மாமியார் மற்றும் கிரிஜாவின் கணவரின் சகோதரி இருவரும் சேர்ந்து கிரிஜாவின் வயிற்றின் மேல் திராவகத்தை வீசினர். இதனால் கிரிஜா அலறித் துடித்தார். அவரது அலறலைக் ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.
கடந்த ஆகஸ்ட் 19-ஆம் தேதி நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.  தற்போது கிரிஜாவின் கணவர் மற்றும் மாமனாரை போலீஸ் கைது செய்துள்ளது.  அவரது மாமியார் மற்றும் நாத்தனார் தலைமறைவாகிவிட்டனர்.

More articles

Latest article