சென்னை: தமிழ்நாட்டில், மே 4ந்தேதி அக்னி வெயில் தொடங்க உள்ள நிலையில், இப்போதே வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில், ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசாவிலும் 5 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என இந்திய வானிலை மையம் மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழ்நாட்டில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் வெயில்மே 4-ந்தேதி தொடங்கி மே 28-ந் தேதி வரை 25 நாட்கள் கழித்து முடிவுக்கு வரும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. இருந்தாலும் இப்போதே, வேலூர், சேலம் உள்பட சில மாவட்டங்களில் வெயிலின் தாக்க்ம 100 டிகிரியை தாண்டி சுட்டெரித்து வருகிறது.
இந்த வெயிலானது தமிழ்நாடு மட்டுமின்றி, ராஜஸ்தான், டெல்லி, ஹரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசாவிலும் சுட்டெரித்து வருகிறது, இதனால் . அனல் காற்று வீசக்கூடும் என்பதால் 5 மாநிலங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.சராசரி வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸை தாண்டி பதிவாகும் எனவும் அக்னி வெயில் காலகட்டத்தில் வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் தெரிவித்து உள்ளது.