கொடைக்கானல்

மிழக அரசு ஞாயிறு முழு ஊரடங்கை ரத்து செய்ததால் கொடைக்கானலில் மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது.

File Pic

கொரோனா தாக்கம் அதிகரிப்பு காரணமாக இந்த மாதம் 3ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடாங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.   வழக்கமாக வார இறுதி நாட்களில் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்லும் இடமான கொடைக்கானல் உள்ளிட்ட இடங்கள் 3 வாரங்களாக ஆளில்லாமல் வெறிச்சோடியது.

தற்போது நாடெங்கும் கொரோனா பாதிப்பு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது.   இதனால் பல மாநிலங்கள் ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்துள்ளனர்.   அவ்வகையில் தமிழகத்தில் நேற்று முன் தினம் முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக் கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டது.

இதையொட்டி கொடைக்கானலில் மக்கள் அதிக அளவில் வந்தனர்.  மக்கள் கூட்டம்  அலைமோதியபடி  காணப்பட்டதால் கொடைக்கானல் புதிய களையைப் பெற்றது.,  சுற்றுலாப் பயணிகள் குறைவால் மனச்சோர்வு அடைந்திருந்த வர்த்தகர்கள் தற்போது மிகவும், மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.