சென்னை: தமிழகத்திற்கு இன்று மேலும் 90 ஆயிரம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னை விமான நிலையம் வந்தடைந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில், தடுப்பபூசி செலுத்தும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. ஆனால், தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக  தடுப்பூசி ஒதுக்கீட்டை அதிகரிக்கக்கோரி தமிழகஅரசு, மத்தியஅரசிடம் கோரிக்கை விடுத்து வருகிறது.

இந்த நிலையில், தெலங்கானா மாநிலம், ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்தில் இருந்து  18 பார்சல்களில் 90 ஆயிரம் டோஸ் கோவக்சின் தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தன.

இந்தப் பார்சல்களை சென்னை விமான நிலைய அலுவலர்கள் தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வு துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனா். அவா்கள் குளிா்சாதன வாகனங்களில் தடுப்பூசிகளை ஏற்றி, தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனா். அங்கிருந்து தமிழ்நாடு முழுவதற்கும் தேவைக்கு ஏற்ப தடுப்பூசிகள் பிரித்து அனுப்பப்படும் என்று அலுவர்கள் தெரிவித்தனர்.