சென்னை: இந்தாண்டு ஜூலை மாதம் 31ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், தமிழகத்தில் 66.31 லட்சம் பேர், வேலை வாய்ப்புகளுக்காக தங்களின் பெயரை பதிவு செய்துள்ளனர்.

இந்த எண்ணிக்கையில் 12.50 லட்சம் பேர் 18 வயதிற்குட்பட்டவர்கள். அதேசமயம், 17.46 லட்சம் பேர், 19 முதல் 23 வயதிற்குட்டபவர்கள். 24 முதல் 35 வயதிற்குட்பட்டவர்கள் 24.55 பேர்.

இவர்களில், 11.69 லட்சம் பேர், 36 முதல் 57 வயதிற்கு உட்பட்டவர்கள். வேலைக்காக காத்திருப்போரில் 9192 பேர் 57 வயதைத் தாண்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மாற்றுத்திறனாளிகளின் எண்ணிக்கை 1.32 லட்சம். இவர்களில், 2.99 லட்சம் பேர், கல்வியில் 10ம் வகுப்பிற்கும் கீழே உள்ளவர்கள் என்று புள்ளிவிபரத்தில் கூறப்பட்டுள்ளது.