சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த அக்டோபரை விட நவம்பர் மாதத்தில் பயணம் செய்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. செ கடந்த அக்டோபர் மாதம் 61.56 லட்சம் பயணிகள் பயணம் செய்த நிலையில், தற்போது கூடுதலாக 1.15 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது. முதல் மெட்ரோ ரயில் சேவை ஆலந்தூர்-சென்னை கோயம்பேடு இடையே கடந்த 2015-ல் தொடங்கியது. தற்போது, பரங்கிமலை – சென்ட்ரல், விமானநிலையம் – விம்கோ நகர் ஆகிய இரண்டு வழித்தடங்களில் 55 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. தொடக்கத்தில், நாள்தோறும் ஒரு லட்சம் பேர் பயணம் செய்தனர். இதற்கிடையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக, மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. மீண்டும் மெட்ரோ ரயில் சேவை தொடங்கியபோது, 20 ஆயிரம் தினசரி பயணித்தனர். இந்த எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வந்தது.

கடந்த சில மாதங்களாக மெட்ரோ ரயில்களில் கடந்த சில மாதங்களாக தினமும் 1.50 லட்சம் முதல் 1.80 லட்சம் பேர் பயணம் செய்து வந்தனர்.கடந்த செப்.12-ல் 2.30லட்சம் பேர் பயணம் செய்திருந்தனர். இது சாதனையாக கருத்தப்பட்டது. பின்னர், அதுவே செப்டம்பர் 30ந்தேதி அன்று  2 லட்சத்து 46 ஆயிரத்து 404 பேர் பயணம் செய்தனர். இது புதிய சாதனையாக கூறப்பட்டது. செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 61.12 லட்சம் பேர் பயணம் செய்தாக அறிவிக்கப்பட்டது.

அக்டோபர் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயிலில் 61.56 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.  செப்டம்பர் மாதத்தை காட்டிலும் அக்டோபர் மாதத்தில் கூடுதலாக 43 ஆயிரத்து 454 பேர் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக, அக்டோபர் 21ஆம் தேதி, 2.65 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டனர் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், நவம்பர் மாதம் கடந்த அக்டோபர் மாதத்தை விட கூடுதலாக 1.15 பேர் பயணம் செய்துள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்து உள்ளது. அதன்படி,  நவம்பர் மாதம் 62.71 லட்சம் பேர் பயணம் செய்து செய்துள்ளனர்.