சேலம்:
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரே கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.  அவர்களில் 2 மருத்துவர்களும் அடங்குவர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை   86,224 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் அதிக அளவிலான பாதிப்புகள் இருந்த நிலையில், தற்போது பெரும்பாலான மாவட்டங்களிலும் தொற்று பரவல் தீவிரமடைந்துள்ளது.
சேலம் மாவட்டத்தில் நேற்று மாலை (29ந்தேதி) நிலவரப்படி 753 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்தனர். அவர்களில் 268 பேர் குணமடைந்துள்ள நிலையில், 483 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 2 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், சேலத்தில்  துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரே கிராமத்தைச் சேர்ந்த 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
முதலில் நடத்தப்பட்ட சோதனையின்போது 2 மருத்துவர்கள் உள்பட 4 பேருக்கு தொற்று உறுதியான நிலையில்,  அங்குள்ள  73 பேருக்கும்  பரிசோதனை செய்யப்பட்டது. இதில், மேலும்  58 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இது அந்த பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.