தோடா

காஷ்மீர் மாநிலத்தில் ராணுவத்தில் சேர இளைஞர்கள் பெருமளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த மாதம் 14 ஆம் தேதி புல்வாமாவில் நடந்த தற்கொலைப்படை தாக்குதலை தொடர்ந்து இளைஞர்களிடையே ராணுவத்தில் சேர ஆர்வம் அதிகரித்து வருகிறது. சமீபத்திய அபிநந்தன் பிடிக்கப்பட்ட நிகழ்வு அந்த ஆர்வத்தை அதிகப்படுத்தி உள்ளது. குறிப்பாக புல்வாமா தாக்குதல் நிகழ்ந்த காஷ்மீர் மாநில இளைஞர்களிடையே இந்த ஆர்வம் மிகவும் அதிகரித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் தோடா பகுதியில் ராணுவ ஆள் சேர்ப்பு முகாம் நடந்தது. இங்கு அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தில் நடந்த இந்த முகாமில்  சுமார் 2000க்கும் மேற்பட்ட காஷ்மீர் மாநில இளைஞர்கள் தேர்வில் கலந்துக் கொண்டுள்ளனர்.

இது குறித்து இந்த முகாமுக்கு வந்த இளைஞர் முபாசிர் அலி, “நான் எனது நாட்டுக்காகவும் வீட்டுக்காகவும் ராணுவத்தில் சேர வந்துள்ளேன். பாகிஸ்தானியரால் சிறை பிடிக்கப்பட்ட அபிநந்தனின் துணிச்சலும் அவர் இந்தியா வந்த போது கிடைத்த வரவேற்பும் என்னைப் போல் இளைஞர்கலை ராணுவத்தில் சேர தூண்டி உள்ளது” என தெரிவித்துள்ளார்.