திண்டுக்கல்,
10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் ஆயுள் தண்டனை கைதிகளுக்கு சிறைவிதிகளுக்கு உட்பட்டு விடுதலை செய்ய இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறி உள்ளார்.
ஆயுள் தண்டனை பெற்று பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைக் கைதிகளை சட்டம் மற்றும் சிறை விதிகளுக்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நடைபெற்ற எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல அமைச்சர்களுடன் சபாநாயகர் தனபால், மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை ஆகியோரும் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, திண்டுக்கல் மாவட்டத்திற்கான பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
மேலும், அதிமுக அரசு பாஜகவின் கிளையாக செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறது. அப்படி ஏதும் கிடையாது என்றும், மாநில உரிமைகளை அதிமுக அரசு விட்டுக்கொடுக்காது என்றும் கூறினார்.
மேலும், ஆயுள் தண்டனை பெற்று பத்து ஆண்டுகள் வரை சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைக் கைதிகளை சிறை விதிகளுக்கு உட்பட்டு மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பையும் முதலமைச்சர் வெளியிட்டார்.