டில்லி
இந்தியாவில் ராணுவத்துறையில் 1 லட்சம் காலி பணி இடங்கள் உள்ளதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது டில்லியில் நாடாளுமன்ற மழைக்காலத் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் போது நாடெங்கும் வேலை இன்மை, பண வீக்கம், விலை வாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் எதிர்க்கட்சிகளால் எழுப்பப்படுகின்றன.
இந்நிலையில் நாடாளுமன்றத்தில் ராணுவத்தில் காலி பணியிடங்கள் குறித்த கேள்வி ஒன்று எழுப்பப்பட்டது. அதற்கு பாதுகாப்புத்துறை அமைச்சகம் பதில் அளித்தது. அதன்படி தற்போது இந்திய ராணுவத்தில் 1,08,005 ராணுவ வீரர்கள் காலி பணி இடங்கள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக ஆட்சேர்ப்பு நடைபெறவில்லை என்பதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60000 காலிப் பணி இடங்கள் உருவாகிறது என்பதும் இந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.