கண்டனம் வந்தாலும் தொழிலில் வளர்ச்சி காணும் ரன்வீர் சிங்

Must read

மும்பை

நிர்வாண புகைப்படத்துக்குக் கண்டனம் வந்தாலும் நடிகர் ரண்வீர் சிங்குக்கு மேலும் நிர்வாண புகைப்பட வாய்ப்பு கிடைத்துள்ளது.

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங்கின் நிர்வாண புகைப்படம் கடந்த சில தினங்களுக்கு முன் பத்திரிகை ஒன்றின் முன்பக்க அட்டையில் வெளியானது. சமூக வலைத்தளங்களில் இந்த புகைப்படம் பகிரப்பட்டு பெரும் கண்டனங்கள் எழுந்தன. ஒரு சிலர் நிர்வாண புகைப்படத்திற்கு ஆதரவு கருத்துகளும் தெரிவித்தனர்.

காவல்துறையிடம் ரன்வீர் சிங்கிற்கு எதிராகப் போலீசில் புகார் அளிக்கப்பட்டதால் சில இடங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.   அதே வேளையில் ரன்வீர் சிங்கிற்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.   இந்த வாய்ப்பு சர்வதேச விலங்குகள் பாதுகாப்பு அமைப்பான பீப்பிள் ஃபார் தி எதிக்கல் ட்ரீட்மென்ட் ஆஃப் அனிமல்ஸ் (பீட்டா) – இந்தியா தரப்பில் இருந்து வந்துள்ளது.

நடிகர் ரன்வீர் சிங்கிற்கு அமைப்பு எழுதிய கடிதத்தில்,

”எங்களது பீட்டா அமைப்பின் பத்திரிகைக்கு நிர்வாண புகைப்படங்கள் தேவைப்படுகின்றன. இந்த போட்டோ ஷூட் சைவ உணவுகளை ஊக்குவிக்கும் வகையில், எடுக்க உள்ளோம். எங்களுக்கு அதற்காக உங்கள் நிர்வாண படங்கள் தேவைப்படுகின்றன.  எங்களுக்கு உதவுவீர்கள் என்று நம்புகிறோம். மேலும் இக்கடிதத்துடன் நடிகை பமீலா ஆண்டர்சனின் புகைப்படத்தையும் உங்களது பார்வைக்காக இணைத்துள்ளோம்”

எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article