சென்னை: கே.கே.நகர் பத்மா சேஷாத்திரி பள்ளிமீதான பாலியல் தொல்லை விவகாரத்தில், மேலும் சில ஆசிரியர்கள் சிக்குவார்கள் என கூறப்படுகிறது.
சென்னை பத்மா சேஷாத்ரி பள்ளியில் நடந்த பாலியல் கொடுமைகள் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியாகி பரபரப்பையும், பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. கைது செய்யப்பட்ட ஆசிரியர் ராஜகோபாலிடம் போலீசார் நடத்திய இரண்டு நாள் விசாரணையிலேயே பல திடுக்கிடும் தகவல்கள் வெளியே வந்துள்ளன.
ஆசிரியர் ராஜகோபாலன் ராஜகோபாலன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னொரு பக்கம், பத்மா சேஷாத்ரி பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடந்து வருகிறது. பள்ளியின் ஒவ்வொரு ஆசிரியர் மற்றும் பணியாளர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. . அப்போது ஸ்கூல்ர பிரின்சிபால் கீதாவிடம் பல கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. ராஜகோபாலனுக்கு எதிராக மாணவிகள் புகார் கொடுத்தும் அதில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று கேள்வி கேட்கப்பட்டு உள்ளது.
பத்ம சேஷாத்ரி ராஜகோபாலனின் பாலியல் சீண்டலுக்கு மேலும் 3 ஆசிரியர்கள் உடந்தை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜகோபாலன் தனது வாக்குமூலத்தில், மாணவிகளின் ஆபாசப்படங்களை வேறு சில ஆசிரியர்களுக்கும் பகிர்ந்ததா கூறியது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்தும் கீதாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதுபோன்ற பாலியல் விவகாரத்தில், பள்ளியில் வேறு யாருக்கு எல்லாம் இதில் தொடர்பு உள்ளது என்று கேள்வி எழுப்பப்பட்டது. ஆனால் இதற்கு கீதா பதில் அளிக்கவில்லை. வேறு யார் பெயரையும் குறிப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படும் என்கிறார்கள்.
இதன் காரணமாக, அந்த பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களையும் விசாரணைக்கு அழைக்க காவல்துறையினர் தயாராகி வருகின்றனர். இதில் மேலும் சில ஆசிரியர்கள் சிக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.