சென்னை: பன்முகத்தன்மையே நம் நாட்டின் பலம் என லட்சத்தீவு விவகாரம் குறித்து முதல்வர் ஸ்டாலின் டிவிட் பதிவிட்டு உள்ளார்.

இந்தியாவின் யூனியன் பிரதேசமான லட்சத்தீவில் நாட்டின் சுற்றுலாத் துறை வருவாய் ஈட்டும் முதுகெலும்பாக உள்ளது. நான்குபுறமும் அழகிய கடலால் சூழப்பட்டுள்ள லட்சத்தீவல் அனைத்து மத மக்களும் அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். அங்கு மீன்பிடித் தொழிலும் பிரதானமாக விளங்குகிறது.

இந்த தீவின் நிர்வாக அதிகாரியாக உள்ள  பிரஃபுல் படேல் என்ற அதிகாரி, மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதனால் அங்கு சர்ச்சை எழுந்துள்ளது. இதையடுத்து, அவரை திரும்ப பெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து திமுக தலைவரும் , தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ள டிவிட்டில்,

#Lakshadweep-இல் திரு. பிரஃபுல் கோடா படேல் என்ற அதிகாரி மக்கள் விரோதச் சட்டங்களை வலுக்கட்டாயமாகத் திணித்து அங்கு வாழும் இசுலாமியர்களை அந்நியப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகள் வேதனை அளிக்கிறது.

@PMOIndia தலையிட்டு அவரைத் திரும்பப் பெற வேண்டும். பன்முகத்தன்மையே நம் நாட்டின் பலம்!  என தெரிவித்து உள்ளார்.