லாக்டவுனுக்கு முன்பு நயன்தாரா, ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்தார் நயன்தாரா .

கொரோனா வைரஸ் பிரச்சனையால் தியேட்டர்கள் எல்லாம் மாதக் கணக்கில் மூடப்பட்டுள்ளதால் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகவிருப்பதாக ஆர்.ஜே. பாலாஜி தெரிவித்துள்ளார்.

இந்தப் படத்தை ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பைக் கவனித்திருந்தார்.

கடந்த இரண்டு நாட்களாக மூக்குத்தி அம்மன் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதற்காக படத்தின் எதிர்பார்ப்பு குறித்து வீடியோ வாயிலாக பேசி பதிவு செய்திருந்தனர் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின், T நட்ராஜன் மற்றும் வாஷிங்டன் சுந்தர்.

இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது. இந்த நகைச்சுவையான காட்சியில், குலதெய்வம் மூக்குத்தி அம்மனை குடும்பத்தாருக்கு அறிமுகம் செய்து வைக்கிறார் RJ பாலாஜி.