லாக்டவுனுக்கு முன்பு நயன்தாரா, ஆர். ஜே. பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்தார் நயன்தாரா .

கொரோனா வைரஸ் பிரச்சனையால் தியேட்டர்கள் எல்லாம் மாதக் கணக்கில் மூடப்பட்டுள்ளதால் படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் மூக்குத்தி அம்மன் தீபாவளி பண்டிகை ஸ்பெஷலாக டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகியது.

இந்தப் படத்தை ஆர்.ஜே.பாலாஜியுடன் இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பைக் கவனித்திருந்தார்.

இந்த படம் ஹாட்ஸ்டார் தளத்தில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் படம் என்ற சாதனையை சமீபத்தில் பெற்றிருந்ததது.தற்போது இந்த படத்தின் பின்னணி இசை அடங்கிய வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்லாவே வரவேற்பை பெற்று வருகிறது.