டில்லி:
காச நோயாளிகளுக்கு மாதந்தோறும் 500 ரூபாய் உதவித்தொகை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
காச நோய் முற்றிலும் குணமடையும் வரை இந்த உதவித்தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் 25 லட்சம் நோயாளிகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மருந்து வாங்குவதற்கு, சத்தான உணவு வகைகளை சாப்பிடவும் இது உதவியாக இருக்கும். நோயாளிகளின் மருத்துவ ஆவணங்கள், ஆதார் அடிப்படையில் இந்த உதவித்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது என்று மத்திய சுகாதார துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.