விக்டோரியா,

ஸ்திரேலியாவில் உள்ள விக்டோரியா மாகாணத்தில் வசித்து வரும் தமிழர்கள் சார்பாக மொய் விருந்து நடத்தப்பட்டது.

தமிழ்நாட்டில் பருவமழை பொய்த்துபோனதாலும், நீர் பற்றாக்குறை, வறுமை காரணமாக ஏராள மான விவசாயிகள் மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டும், அதிர்ச்சி காரணமாக மரணத்தையும் எய்துள்ளனர்.

கடந்த 140 ஆண்டுகளில் தற்போதுதான்  பருவமழை  பொய்த்துபோனதான் காரணமாக  தமிழ்நாடு மோசமான வறட்சியை எதிர்கொள்கிறது.

வறட்சி மற்றும் வறுமை காரணமாக 2015 முதல் தமிழகத்தில் 1500 க்கும் மேற்பட்ட விவசாயிகள்  தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு உதவி செய்யும் வகையில்,
விக்டோரியாவில் உள்ள பல்வேறு தமிழ் சங்கங்கள்  முன்வந்துள்ளன. இதைத்தொடர்ந்தே  ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் தமிழர்கள் சார்பில் மொய் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

விக்டோரியாவில் உள்ள தமிழ் அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தது. இதில் இந்தியா வில் உள்ள அனைத்து மாநிலத்தவர் மட்டுமல்லாத அங்கு வசித்து வரும் வெளிநாட்ட வரும் கலந்துகொண்டு மொய் விருந்து அளித்தனர்.

வாருங்கள்…! உழவையும், உழவரையும் காப்போம்..! என்று அழைப்பிதழில் அச்சிடப்பட்டு

கடந்த 15ந்தேதி விக்டோரியாவில் உள்ள கோபர்க் டவுன் ஹாலில் இந்த விருந்து நடைபெற்றது.

இந்த மொய் விருந்துமூலம் வசூலான பணம் மூலம், தமிழகத்தில் இறந்துபோன விவசாயிகளின் குடும்பத்திற்கு, வாழ்வளிக்கும் வகையில், அவர்களுக்கு தேவையான ஆடுகள், மற்றும் பள்ளி, கல்லூரிக்கான படிப்பு செலவுகளை ஆஸ்திரேலியாவில் உள்ள தமிழ் அமைப்பினர் வழங்கினர்.

ஆஸ்திரேலிய தமிழ் அமைப்பு சார்பில்,  வேதாரண்யம் காரை நகர் பகுதியை சேர்ந்த இறந்த விவசாயி குடும்பதுக்கு 23,000 நிதி, மற்றும் செலவுக்கு பணம் கொடுக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து மற்றொரு மறைந்த விவசாயியின் மகள் கல்லூரி படிப்புக்கான கல்வித்தொகை ரூ.10 ஆயிரம் காசோலை கொடுக்கப்பட்டது.

மேலூம்,  திருப்பூண்டி வைரப்பன் குடும்பத்துக்கு நிதி உதவி, தேவூர் ராமச்சந்திரன்,  கடம்பங்குடி வீரமணி,

நாகை மாவட்டம் கீழ்வேளுர் விவசாயி குடும்பத்துக்கு ரூ.25 ஆயிரம் உதவி, மேலும் செலவுக்கு பணம் கொடுத்து உதவி செய்துள்ளனர்.

மேலூம், இதுபோன்ற பல்வேறு விவசாயிகளின் குடும்பத்துக்கு நிதி உதவி மற்றும் படிப்புக்கான செலவினை ஆஸ்திரேலிய தமிழ் அமைப்பு சார்பாக வழங்கப்பட்டது.

[youtube https://www.youtube.com/watch?v=l58paqS61Kc]