தினகரன் ஆதரவு பெண் எம்.பி. மீது நிலமோசடி புகார்

நெல்லை:

திருநெல்வேலி அ.தி.மு.க ராஜ்யசபா எம்.பி. மீது நில மோசடி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையை சேர்ந்த வசீகரன் என்பவர் இன்று திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்தார்.

அதில் திருநெல்வேலியில் தங்களுக்குரிய 3.5 ஏக்கர் நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் பதிவு செய்து அ.தி.மு.க ராஜ்யசபா பெண் எம்.பி. விஜிலா விற்பனை செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக நாடாளுமன்ற நடவடிக்கை குழுவிற்கு அனுப்பிய ஆவணங்களையும் கலெக்டரிடம் காண்பித்தார்.

அ.தி.மு.க அமைச்சர்களைத் தொடர்ந்து தற்போது எம்.பி. மீதும் மோசடி புகார் அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எம்.பி. விஜிலா கடந்த வாரம் தினகரனை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


English Summary
cheating complaint against ttv dinakaran supporter admk rajyasabha mp vigila