உத்தரகாண்ட் மாநில சுற்றுலாத்துறை அமைச்சரும், பிரபல சீரியல் நடிகை மோஹனா குமாரி , அவர் கணவர் , தந்தை அவருடைய மாமியார் உள்ளிட்ட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
தொற்று குணமாகாத நிலையில் நடிகை மோஹனா குமாரி மற்றும் அவரது குடும்பத்தினர் வீடு திரும்பியுள்ளனர். வீட்டில் தனிமையில் இருக்குமாறு மருத்துவமனை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
இது குறித்து மோஹனா குமாரி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்
நாங்கள் வீடு திரும்பிவிட்டோம். ஆனால் எங்கள் அனைவருக்கும் இன்னும் கரோனா தொற்று குணமடையவில்லை. நாங்கள் முற்றிலுமாக தனிமையில் இருக்கிறோம். இது சரியாக எத்தனை நாள் எடுக்கும் என்று எனக்கு தெரியவில்லை. நாங்கள் மொத்தம் 10 நாட்கள் மருத்துவமனையில் இருந்தோம். ஆனால் அதற்கு 5 நாட்களுக்கு முன்பே எனக்கு அறிகுறிகள் தென்பட்டன என பதிவிட்டுள்ளார் .