நடிகை ரம்யா கிருஷ்ணன் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் ரஜினியுடன் ’படையப்பா’ படத்தில் நடித்த நீலாம்பரி வேடத்தை யாராலும் எளிதில் மறக்க முடி யாது. அதேபோல் ’பாகுபலி’ படத்தில் சிவகாமியாக மகாராணி வேடத்தில் நடித்தி ருந்தார். வெப் சீரியலில் நடிக்க வந்தவர் ஜெய லலிதா ரோல் மாடல் வேடம் என்று அழைக் கப்படும் சக்தி கதாபாத்திரத்தில் ’குயின்’ வெப் சீரிஸில் நடித்தார். இதை கவுதம் மேனன் இயக்கி இருந்தார்.
ஜெயலலிதா வாழ்க்கை கதை படமாக உருவா கிறது ’தலைவி’. ஏ.எல்.விஜய் இயக்குகிறார். இதில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதற்காக பரத நாட்டியம் கற்றுக்கொண்டதுடன் தமிழ் பேசவும் கற்றார்.
ரம்யா நடிக்கும் ’குயின்’ வெப் சீரிஸின் 2ம் பாகம் உருவாகவிருக்கிறது. அதில் நடிக்கத் தயாராகி வருகிறார் ரம்யா கிருஷ்ணன். அவரிடம். ’தலைவி’படத்தில் ஜெயலலிதா வேடம் ஏற்று நடிக்கும் கங்கனா பற்றி கேட்டபோது பதில் அளித்தார்.
அவர் கூறும்போது,’கங்கனா துணிச்சலானவர் , தன்னை சுயமாக நிலை நிறுத்திக்கொண்டவர். அவர என்னை மிகவும் கவர்ந்தவர். அவர் மற்றொரு குயின்’ என்றார் ரம்யா கிருஷ்ணன்.