தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முகமது பைசல் லட்சத் தீவு தொகுதி எம்.பி.யாக தேர்ந்துக்கப்பட்டார்.

கடந்த 2009 -ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது அப்போதைய மத்திய அமைச்சர் சையதுவின் மருமகன் முகமது சலியாவை கொலை செய்ய முயற்சித்ததாக முகமது பைசல் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்த வழக்கில் 2023 ஜனவரி 11 ம் தேதி முகமது பைசலுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து காவெரட்டி செஷன்ஸ் நீதிமன்றம் தீர்பளித்ததைத் தொடர்ந்து ஜனவரி 13 ம் தேதி அவரது மக்களவை உறுப்பினர் பதவி பறிக்கப்பட்டது.

இதனை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் முகமது பைசல் வழக்கு தொடர்ந்த நிலையில் எம்பி பதவியில் இருந்து அவரை தகுதி நீக்கம் செய்தது செல்லாது என்று உத்தரவிட்டது.

கேரள உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வெளியாகி 2 மாதங்கள் கடந்தும் அவரின் தகுதி நீக்க அறிவிப்பு திரும்ப பெறப்படவில்லை இதனால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை விரைவில் வரவிருக்கும் நிலையில் முகமது பைசல் மீதான தகுதி நீக்க உத்தரவை மக்களவை செயலகம் திரும்பப் பெற்றுள்ளது.