சென்னை:

மிழகத்தின் மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பை நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல் செய்து டிவிட் பதிவிட்டு உள்ளார். அதில், மோடி சீன அதிபர் படத்துடன் ‘அப்படி போடு. இன்னும் என்னவெல்லாம் பாக்கணுமோ ‘ என்று நக்கல் செய்து பதிவிட்டுள்ளார்.

சென்னை அருகே உள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே அதிகாரபூர்வமற்ற 2-வது கட்டச் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அப்போது மாமல்லபுரத்தில் உள்ள புராதன சிற்பங்களை இருவரும் கண்டு ரசித்தனர்.

சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையையொட்டி தமிழக அரசும் பல்வேறு விதமான சிறப்பு ஏற்பாடுகள், செய்து வரவேற்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்புக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் சிலர் தரப்பில் இருந்து சமூக வலைதளங்களில்  #GoBackModi ஹேஷ்டேக் ஒருபுறமும், #TNWelcomesModi ஹேஷ் என  பல ஹேஷ்டேக்குகள்  சமூக வலைதளங்களில் டிரெண்டிடாகி வந்தன.

இந்த நிலையில் பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் செய்லகளை கடுமையாக எதிர்த்து எதிர்வினையாற்றி வரும் நடிகர் பிரகாஷ், மோடி, சீன அதிபர் சந்திப்பை கிண்டல் செய்து டிவிட் பதிவிட்டு உள்ளர்.

அவர் பதவில், “அப்படிப் போடு தருணம். இன்னும் என்னவெல்லாம் பார்க்கணுமோ சாமி!” என்று தெரிவித்துள்ளார்.

சீன அதிபர் தமிழகம் வந்திருப்பதை திமுக, காங்கிரஸ் உள்பட தமிழகத்தில் அனைத்து தரப்பினரும் கட்சி மாச்சரியம் இன்றி வரவேற்றுள்ள நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் கிண்டல் செய்திருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.