டில்லி,

ந்த ஆண்டின் பட்ஜெட் தொடர் பாராளுமன்றத்தில் நடைபெற்று வருகிறது. முதல் நாளன்று குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார்.

அவரது உரைக்கு நன்றி தெரிவித்து  அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசிய நிலையில், பிரதமர் மோடி இன்று பேசினார்.

அவர் பேசியதாவது,

மக்கள் சக்திக்கு சிறப்பு வாய்ந்தது. இதனால் தான் ஏழை குடும்பத்தில் பிறந்த ஒரவர் பிரதமராக முடிந்தது. சுதந்திர போராட்டத்தின் போது என்னை போன்ற சிலர் மரணமடையவில்லை. ஆனால் நாங்கள் இந்தியாவுக்காகவும், நாட்டுக்கு சேதவை செய்யவும் வாழ்கிறோம். காலப் போக்கில் எப்படியோ ஜன சக்தி மறக்கடிக்கப்பட்டு விட்டது, இதனை நாம் ஏற்கக் கூடாது.

நம் மக்களின் உள்ளார்ந்த வலிமை புதிய உயரத்துக்கு இந்தியாவை எடுத்துச் செல்லும் என்பதை நாம் புரிந்து கொண்டு இதனை நாம் பாராட்ட வேண்டும்; ஜனசக்தி மீதான நம்பிக்கை நல்ல பலன்களை தரும்.

சுத்தத்தையும் அரசியலாக்கிய சிலரை பார்க்கும் போது வேடிக்கையாக உள்ளது. ஏன் நாம் ஒன்றாக சேர்ந்து பாரதத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள கூடாது. நாங்கள் அனைத்தையும் அரசிய லுக்காக செய்வதில்லை. நாட்டின் நலன் மட்டுமே எங்களின் முழு விருப்பம் ஆகும்.

பண மதிப்பு நீக்கத்தை பொருத்த வரை நல்ல பொருளாதாரம் தேவை பட்டது அதற்கு இதுவே சரியான நேரம் ஆகும். நம் உடல் நன்றாக இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்ய முடியும்.
அதே போன்று நம் பொருளாதாரம் நன்றாக இருக்கும் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனாலேயே பண மதிப்பு நீக்க நடவடிக்கை அவசரமாக மேற்கொள்ளப்பட்டது.

தூய்மை இந்தியா போன்றே பண மதிப்பு நீக்க நடவடிக்கையும் இந்தியாவை சுத்தமாக்கும் முயற்சியே ஆகும்.

இந்தியாவில் கருப்பு பணம் மற்றும் ஊழலற்ற பொருளாதாரத்தை ஊக்குவிக்க இது உதவும்.

காங்கிரஸ் ஆட்சியில், நாடு முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இதனால் தான் பூகம்பம் ஏற்படுகிறது.

ஊழல் அடையாளத்தை வைத்து கொண்டு சிலர் எப்படி சேவை அல்லது நேர்மையான கொள்கை களை பார்க்க முடியும்.

கடந்த 1975 முதல் 77 வரை ஜனநாயகம் எப்படி நசுக்கப்பட்டது, எதிர்கட்சி தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டது, பத்திரிசை சுதந்திரம் நசுக்கப்பட்டதையும் பார்த்தோம்.

இவ்வாறு அவர் பேசினார்.