பெங்களூரு:

கர்நாடகா சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. பிரதமர் மோடி இன்று முதல் தனது பிரச்சாரத்தை சாம்ராஜ் நகரில் தொடங்கினார். மாநில பாஜக தலைவர்களின் எதிர்பார்ப்பை மோடியின் பிரச்சாரம் நிறைவு செய்யவில்லை என்று பாஜக.வினர் கவலை அடைந்துள்ளனர்.

மோடியின் பிரச்சாரம் மூலம் தேர்தல் களம் தங்களது பக்கம் திரும்பும் என்று நம்பிக்கொண்டிருந்த பாஜக.வினரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் அமையவில்லை என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மோடியின் நீண்ட பிரச்சார உரையை கூர்ந்து கவனித்த ஒரு பகுப்பாய்வாளர் கூறு¬கையில், ‘‘மோடி வழக்கம் போல் நன்றாக பேசினார். ஆனால், இந்தி மொழியிலான அவரது பேச்சை கூட்டத்தினர் புரிந்து கொள்ளும் வகையில் சரியான முறையில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. இதனால் மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படவில்லை.

வழக்கம்போல் ராகுல்காந்தி, சித்தராமையா, சோனியாகாந்தி, மன்மோகன் சிங் ஆகியோரை விமர்சனம் செய்தார். ஆனால், சித்தராமயை£ எழுப்பிய மாநில பாஜக தலைவர்களின் ஊழல் மற்றும் 2014ம் ஆண்டு மோடி அளித்த வாக்குறுதிகள் குறித்து அவர் பேசவில்லை.

மோடி பேசும் இருந்த காரசாரம் கன்னட மொழிபெயர்ப்பாளரின் பேச்சில் இல்லை. கன்னடத்தில் மொழிபெயர்த்த பின்னர் தான் மோடியின் பேச்சுக்கு மக்கள் கைதட்டினர். இதன் மூலம் மோடியின் வழக்கமான உடல் அசைவுகளுடன் கூடிய பேச்சு கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பான்மையாகன மக்களு க்கு புரியவில்லை’’ என்றார்.

இது குறித்து மைசூரு பாஜக தலைவர் கூறுகையில், ‘‘இது தான் முதல் பிரச்சாரம். இதன் பின்னர் அடுத்தடுத்து அவரது பிரச்சாரத்தில் மாற்றம் செய்யப்படும்’’ என்றார்.

மேலும், தோல்வி பயம் காரணமாக சித்தராமையா 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக மோடி கூறினார். ஆனால், லோக்சபா தேர்தலில் மோடியும் வதோதரா மற்றும் வாரனாசி தொகுதிகளில் போட்டியிட்டார் என்பதை மறந்துவிட்டு பேசினார். இந்த கருத்தை அவர் வெளியிப்படுத்தியிருக்க கூடாது என்று பகுப்பாய்வாளர் தெரிவித்தார்.